Saturday, August 27, 2011

நான் எனும் ஏதோ ஒன்று!!!

உன்னை நான் எங்கும் பார்த்ததில்லை!
பார்ப்பேன் என்று நினைத்தப்பிறகு வந்தாய்
நான் எண்ணிய நீ என எண்ணிக்கொண்டிருந்தேன்!
உன் முகம் போன்ற ஒரு முகம் என் நினைவில்
உன் பேச்சும் பார்வையும் கூட அது போலவே!
ஆனால் நான் எண்ணிய நீயாக நீ இல்லை
இன்றைகளுக்குள்ளும் நாளைகளுக்குள்ளும்
புகுந்துதேடிக்கொண்டே இருக்கிறேன்
உனக்குள் நான் எண்ணிய நீயை!
மெதுவாக உருளும் நேரத்தின் கொலையில்
வடிந்து கரையும் தெளிவிற்குள் உணர்வது
நீ என்பது நான் எண்ணிய உருவமே!
நீ என்பது நான் எண்ணிய உள்ளமில்லை என்று!
உன் முடிவுகள் என்னை சுற்றியே வட்டமிட்டு
ஊர்ந்தபடியே என்னையும் ஆழ்ந்து நடுகிறது!
உரமாக என்னையே தெளித்து
விதையாக என்னையே நட்டு
தண்ணீராக என்னையே பாய்ச்சி
வளர்வேனா என்று பார்த்து நிற்கிறது
உன் குறிக்கோள்கள்!
உன்னால் என் கோபவேர் வெயில் பட்டு தழைத்து தரையிலும்
உனக்கு பயந்து என் காய்ந்த இலைகள் பூமிக்குள் நெளிகிறது!
இப்படி நான் எனும் ஏதோ ஒன்றை
தழைத்து வளர்கிறேன்
உன் கேள்விகளையும் என் மௌனங்களையும்
தாங்கியபடி!

3 comments:

j.k........squire said...

simply superb round

மாய உலகம் said...

கவிதை ஒற்றை வரியில் அருமை என்று சொல்லிவிட்டு செல்வதற்கு மனமில்லை..... நான் எதிர்பார்த்த வடிவம் நீ...என் உள்ளம் நீயல்ல... உன் உள்ளம் நான் எதிர்பார்த்தது போல் இல்லை... ஆனால் உன் உள்ளம் நானாக இருக்க விரும்புகிறேன் என வித்தியாச பாணியில் சொல்லி அசத்தியுள்ளீர்கள்....மீண்டும் படிக்க தூண்டிய நுண்ணிய மன போராட்டத்தின் வரிகள் அசத்தல் வாழ்த்துக்கள்

anandrajah said...

நீங்கள் ஜெயித்து விடுகிறீர்கள்.. உங்களின் வலியையும் வார்த்தைகளின் மூலம் எங்களை உணரச்செய்வதில்..! பிடித்த வரிகள் எனது கீச்சுகளில் உங்களின் படைப்பாக.!