Friday, February 8, 2008

காதல் மறித்து...

எப்போது புரியும் உனக்கு, என் அன்பே
உனக்கான என் காதல் மறித்து
வருடம் பல ஆன உண்மை!
வார்த்தைகளில் பஞ்சம் இப்போது அன்பு
நம் தொடக்கம் எப்படியோ?
பட்டசாய் வெடித்து, வெளிச்சவண்ணம் பாய்ச்சி
இப்போது மிச்சம் குப்பையாய்...

காதலின் சாயல் கூட காணாமல் போய் நாட்கள் பல
கண்ணில்...
உயிர்ப்புடன் தகிப்பதோ இன்று
ஊமையான கூக்குரலும்...
மூச்சடைக்கும் வாழ்க்கையும்...
சொல்லாத வெறுப்பும்...
உயிர் கொல்லும் தனிமையும்...
வண்ணம் பறித்த பார்வைகளும்...
கனவுகள் காணாமல் போன எதிர் காலமும்...
எப்படி இறந்து போனது என் காதல்...
சட்டென்று சாகவில்லை தான்
தினம் தினம்...

கொஞ்சம் கொஞ்சமாய்
ஒரு பார்வையில் சிறிது மறித்து...
ஒரு சொல்லில் கொஞ்சம்...
சந்தேகத்தில் இன்னும் வேகமாய்...
இறந்த என் காதலை எண்ணி
கண்ணீர் விட தோன்றும்...
ஆனால்
வேதனையை விட வெறுப்பு கூடுதல்
காரணம்...
என் காதலை நீ கொன்ற விதமோ...

யாருக்கு காயமும், வேதனையும், பாதிப்பும் கூடுதல்
இந்த உயிரற்ற விளையாட்டில்?
உனக்கா... எனக்கா...
மறித்தது என் காதல் என்ற உண்மை புதைத்து வைக்கலாம்தான்...
ஆனால்
அந்த புழுக்கம் போதும் நான் இறக்க
இதோ...
என் வாழ்வின் கசப்பு
நான் தொடும் எல்லாவற்றிலும் சாயமாய்...
இத்தனை வேதனை சகிக்க
எத்தனை காதல் இருந்திருக்க வேண்டும்
உன்மேல் என்னுள்...
எஞ்சி இருப்பது வறண்ட நான் மட்டும்
அடுத்து செய்வதறியாது
உன் நினைவுகள் புதைத்த கல்லறையில்
நானே காத்து!