Monday, January 21, 2008

வர்க்கம்

ஈட்டி தங்கி வேட்டையாடி
வீடு காத்து நாடும் காத்த வீர மறவர்
இருந்தனராம் முன்பு...
வீரம் மீசைக்கு பின் மறைந்தும், மறந்தும், மறித்தும்
ஆண்மையும் வாயின் நெருப்பில் பொசுங்கி போக
பொறுப்பும் பெண்ணின் கையில் கொடுத்து விட்டுசூம்பி போன வர்க்கம் ஏனோ
ஆண் என்ற வார்த்தையில் மட்டும் கம்பீரமாய்...

காலை தொடங்கி இரவு வரை
குடும்பம் மட்டும் நினைத்து
பேணி வளர்த்து, பொத்தி பொத்தி காத்து
குடும்ப விருட்சத்தின் ஆணி வேறாய்
பெண்கள்!
இன்று படி தாண்டியும் பத்தினிகள் ஆக
படிப்பும், வேலையும், குடும்பமும் கயிர் போல் திரிந்து நிற்க
நிலை தப்பி விழாமல்
தினமும் கம்பியில் பயணம்...

வீட்டில் அடுப்பெரிக்க பிறந்த பிள்ளைக்கு
பாலூட்ட இயலா அவலம்
ஏனோ
எரியும் நெஞ்சு அணையாது
அந்த மார்பின் பால் கசிவில்...
சமுதாயத்தின் அடையாளத்திற்கு
தாலி மிக முக்கியம்தான்
சுமக்க போவது என்னவோ பெண்தான்
கல்யாண சந்தை பேரம் பேசி
மார் தட்டி விலை போவதோ ஆண்...
ஏனோ சபையில்
தலை நிமிர்ந்து ஆணும்...
தலை குனிந்து பெண்ணும்...