என் நாட்களின் முடிவுகளில்
மனசின் இருட்டு பிரதேசத்தில்
எஞ்சி தொக்கி நிற்பது
கோபமும் விரத்தியும் சோர்வும்
என் உணர்வுகளுக்கு காரணம் உண்டா?
தெரியவில்லை!!!
என் முயற்சிகளின் முடிவில்
புதை சேற்றில் சிக்கியது போல
மூச்சி விட முடியாது
நெஞ்சை அழுத்தும்
என் கோபம்...
எதை நினைத்து என் வெறி?
என் வாழ்கை பாதையின் நீளம் கண்டா?
எடுக்க வேண்டிய முடிவுகளை கண்டா?
என் தனிமையை கண்டா?
குழப்ப கூடுகளின் தாக்கம் கண்டா?
என் கடமைகளை கண்டா?
என் சரிகளும் தப்புகளும் தர்க்கம் கண்டா?
எது எப்படியோ...
என் கோபம் மட்டும்
கொழுந்து விட்டு
கனன்று கொண்டே....
இரைச்சலோடு கத்த தோன்றும்!!
கை வலிக்கும் வரை அடிக்க தோன்றும்!!!
நெஞ்சு அணையும் வரை அழ தோன்றும்!!!
எல்லாம் அடங்கி வெறுமை பரவும்!!!
என் கோபங்களுக்கு அர்த்தம் உண்டோ?
இருக்கலாம்...
என் கோபங்களை சொல்லி அழ தோள் வேண்டுமோ?
வேண்டாம்...
என் கோபங்கள் மறைந்து போகுமோ?
போனாலும் போகலாம்...
என்னதான் என் பிரட்சனை?
குழப்ப சிடுக்கின் உள்ளில் அமர்ந்து
கோபக்னியில் உழன்று உழன்று
எதை தேடி தான் என் ஆவேசம்...
என்னை புரிந்து
என் கோபம் தணிக்க
ஒன்றுமே இல்லாத
வேற்று பிரதேசம்!!!
மெல்ல தெளியும் நிமிடம்
ஒன்று புரிகிறது....
இன்றைய என் பொழுதில்
என் கோபம் மட்டுமே
உயிர் ஒன்று உண்டு
என்னுள் என்று
உணர்த்திக்கொண்டு...
Friday, June 27, 2008
Subscribe to:
Posts (Atom)