என் அன்பு தந்தையே!
வாழ்வின் பொருள் இன்னதென்று
தெரியாது இன்னும்
விளிம்புகளில் தொங்கிக்கொண்டு நான்!
நாட்கள் போக போக
ஏன் காலசுவட்டின் பக்கங்கள்
கருகி போய் இருட்டின் ஓரத்தில்
இன்னும் தொக்கி போய் நான்!
என் இந்த நெளியும் நாட்களில்
நீள்வட்டமாய் என் பிம்பம்
எனக்கே அடையாளம் தெரியாது...
திரும்ப திரும்ப கேட்கிறேன் என்னையே
என் பிறப்பின் அர்த்தங்களை!
இல்லாத பொருளை, தொலைத்தாய் எண்ணி
தேடும் கரைசலாய் நான்!
எத்தனை முயன்றும் முழுதாய்
சிரிக்கும் சிரிப்பை உங்களுடன் புதைத்து விட்டு
மறையும் ஒரு ஒரு பகலும் காத்து நிற்கிறேன்!
மனதின் ஆழத்தில் இருந்தாலும்
அரித்து அரித்து போய்கொண்டேயிருக்கும்
நினைவுகளை கண்டு செய்வதறியாது
பதறி போய் நான்!
என்ன சமாதானம் சொல்லியும்
என் நேரம் விழுங்கிகொண்டே இருக்கின்றது
உங்களை பிரிந்த வேதனை!
அலையடிக்கும் மணலாய்
திசைதோறும் போகும்
என்னோடு நீங்களாவது இருந்திருக்கலாம்...
ஒண்ட இடமில்லாது ஓடும்
இந்த பரதேசி வாழ்வில்
சிறிதேனும் சந்தோஷம் இருந்திருக்கக்கூடும்!
அதை விடவும் மேல் நீங்கள் இருந்து
நான் போயிருந்தால்!!!
நினைவுகளும் என் சமாதியில்
ஏகாந்தம் தந்திருக்கும் இந்நேரம்
நான் என்பதை கரைத்து கரைந்து...
ஏனோ
என் மனதிற்கு தெரியும்
வெகு தூரம் இல்லை!!!
காண்போம் மறுபடி என் தந்தையே...
விடியும் என் ஒவ்வொரு நாளும் காத்து தான் நிற்கிறேன்!!!
Monday, March 24, 2008
Subscribe to:
Posts (Atom)