Sunday, October 18, 2009

என் காதலன்களின் பட்டியல்...

நெஞ்சின் வாசம் தூக்கிபோகும்
என் நினைவுகளின் கல்லறைக்கு...
காலம் சுழல சுழல
நான் என்ற உணர்வு
மருகிபோய்...
எது நான் என்ற வினாவுக்கு
விடை தேடுகிறேன்...
தேட கையில் பூதகண்ணாடியும்
வரை படமும்...
நடந்து நடந்து களைத்து போகும்
கால்கள்...
என் வழியில் ஒரு மானுடன்
காதல் பார்வையுடன்...
கால் பிடித்து விட
கண்ணயர்ந்தேன்...
கண் விழித்து அவன் கை விலக்கி
மேலும் நடந்தேன்...
தாகம் மிக
சுற்றி பார்க்க
சூரியனை பிரதிபலிக்கும் நீர் தேக்கம்
தண்ணீர் கையிலெடுக்க
என்னை பார்த்தான்
இவன் காந்தர்வன்....
அவன் கை பற்றி நீரில் மிதந்தேன்
உடலும் மனமும் வழியவழிய...
இதழில் முத்தமிட்டு உயிரை
குடித்தான்....
களைத்து அவன் உறங்க
நான் நடக்கிறேன்...
வழி முழுக்க
முட்கள்...
வழிப்போக்கன்
வந்தவன் கசிந்த ரத்தத்தை
உரிந்துகிறான்...
அவனையும் தள்ளிவிட்டு
நடக்கிறேன்
கண்ணோடு கண் நோக்கி
நீ அழகு என்றான்
ஒரு தேவன்...
புளகாங்கிதம்
அவன் ஸ்பரிசத்தில்
ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகுகள்
ஒன்றாய் வருடியது போல்
இவனையும் விடுத்து நடந்துகொண்டே இருக்கிறேன்...
தேடி தேடி நடக்கும் வழி
இமைக்கும் நேரமெல்லாம்
காதல்...
விழுந்து எழுந்து
திளைத்து உணர்ந்து
காதலன்களின் முகம் நியாபகம் இல்லை
முகங்களின் மேல் முகம் படிந்து....
விகாரமாய்
விஸ்வரூபம் ...
ஆயினும் என் காதல்
சிறு நீரோடையாய் போகும் வழியெல்லாம்
படர்ந்து...
விரவி...
காதலன்கள் ஓலம் காதில் அயராது...
ஆயினும் என் தேடல் நிற்காமல்...
என்னை வலியுறுத்த காதல்
தேவையில்லை
நானே காதலாகினேன்...

Friday, October 16, 2009

வட்டம்!!!

எப்போதும் நடக்கும் பாதை
இயந்தரதனமாய் நடப்பேன்
என்னுடைய அறை முழுக்க
வாடை!!!
இன்னதென்று பிரித்தெடுக்க முடியாது...
நாசியில் பட்ட நேரம்
திடுக்கிட்டு கண் திறந்து பார்ப்பேன்
ரத்தமும்
மலக்கழிவும்
எச்சமும்
நோயும்
மெல்ல கசியும் உயிரும்
கலந்து தரும் வாடை அது...
எதன் சதவிகிதம் அதிகம் என்பது
அன்றைய நாளை பொறுத்து!
எத்தனை நாள் முயன்றும்
பழக்கபடாத வாடை...
கண் முன் கசியும் உயிர் நாளும்
கண்டு எத்தனை நாள் இன்னும் மிச்சம்
என்று கணக்கிடும்
சித்திர குப்தன் வேலை எனக்கு!
என்றோ உயிருடன் இருந்து
இப்போதோ நலிந்து
மெல்ல வாடை கசிய
என் முன் நிஜ மனிதர்கள்...
சொந்த பெயர்கள் மறந்து
நோயின் பெயரால் கூப்பிட படும்
கூடுகள்...
சொந்தங்கள் சுற்றமாய் சில நேரம் கேட்பார்கள்
இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்பார் என்று
மனப்பாடம் செய்து வைத்த பதில்
கூச்சமின்றி என் வாயில் இருந்து...
நோயின் வீரியம்
மிச்சமீதி இருக்கும் தெம்பு
எல்லாம் பொறுத்து இத்தனை
நாள் என்ற என் கணக்கை...
வருவு செலவு கணக்கு கேட்ட திருப்தியில்
அவர்கள் சமாதானமாய் செல்வார்...
சில வேளை சில கூடுகள் பேசும்
பக்கம் சென்று
இன்னும் எத்தனை நாள் என்று நான்
துலா தட்டை தூக்கி பார்க்கும் நேரம்...
மெல்லிய இருட்டின் பயம்
கண்ணில் தெரிய
என் கை பற்றி சிறிது நேரம் பேச கெஞ்சும்
மனிதம்
எனக்கும் ஆசை தான்...
கை பற்றும் அந்த நொடி
மனம் மெல்ல அசைபோடும்
இவர் வாழ்கை எப்படியோ என்று
எத்தனை முறை சிரித்தாரோ
எத்தனை முறை அழுதாரோ
எத்தனை முறை தோற்றாரோ
ஆயினும்
அடுத்த நொடி புத்தி பேசும்
இது சரியான நடைமுறை அல்ல என்று...
நான் கொடுத்த உறுதிமொழியில்
நெஞ்சுக்கும் எண்ணங்களுக்கும்
இடமில்லை...
மனம் லயிக்காது
புத்தி மட்டுமே செயலிட வேண்டும் என்று
சத்தியம்...
கை நீட்டி சிறிது மனிதம் தேடும்
கையை விலக்கி
கல்லை போல்
வேறு கூடு நோக்கி
என் நடை...
இன்னுமொரு உயிர் அழுகி
வரும் வாடை
என்னில் இருந்து
என்பதை புரிந்தும்
வட்ட வட்டமாய்...
நான்!!!

Monday, October 12, 2009

கள்ளன்!!!

மெல்லிய குளிர்
கண்கள் இருட்டை உள்வாங்க
உன் பேச்சு காதோரம் மெதுவாய்
என் வெளிச்ச வேதனை நீ
கரைகிறேன் ...
கரைகிறேன்...
இதழ் ஈரம் காதுமடலை சுட்டெரிக்க
எப்படி சாத்தியம் உன்னால்
ஒரே நேரம் உயிர் கொடுத்து உயிர் எடுக்க...
ஆழிபெருக்கில் அடித்து செல்லும் சிறு துரும்பாய்
நான்
உன்னால் அழுகிறேன் சிரிக்கிறேன்
ஒரே நிமிடகரைசலில்
நான் நீயாக
நீ நானாக
கரைகிறேன்...
கரைகிறேன்...
உன் வார்த்தைகள் எனை எழுப்ப
என் பாட்டோ உனை தாலாட்டும்
இத்தனை நாள் சுமந்த சோகம்
நொடி நேரம் இடம் மாறி
சுமைதாங்கியும் என்னோடு
கை கோர்த்து நடக்க
கரைகிறேன்...
கரைகிறேன்...
இறந்த பின்னும் உயிர் பெற்று எழ
நீ
மட்டும் தான் காரணம்

Sunday, October 11, 2009

காத்திருப்பேன் !!!


இனிய நினைவு போர்வை இறுக்கி போற்றி,
பேச்சு தலையணை கட்டி பிடித்து,
தனிமை குளிர் விரட்டி
தூக்கம் தேடும் இக்கணத்தில்
ஏனோ ....
உன் சிரிக்கும் பார்வையும்
உன் மயிலிறகு மனதும்
கதகதப்பாய் என்னை சுற்றும்...
என் இமை இரண்டும்
உறக்க சுள்ளிகள் எரிக்க
உன் ஞாபக புகை
ஆற்று சுழலாய்
இந்த பேதை நெஞ்சின் அலைகளை
இன்னும் தத்தளிக்க வைத்து....
ஆனால்
நீ உறங்கு
என் அன்பே
என் புன்னகை சூடு பிடித்து...
உனக்கான என் வாசம்
சிறை அடைத்த பெட்டகம்
இதோ
என்னிடம்....
மீண்டும் உன்னை காண
நேர்கையில் உன்னிடம்
கேட்பேன் பண்டமாற்று!
உன் கனிவு பார்வையை
மொத்த விலைக்கோ
அல்ல
குத்தகைக்கோ...

More sidhar pattu!!!


சிவவாக்கிய சித்தர்

* நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணு என்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்...
சுட்ட சட்டி சட்டுவம்
கறிசுவையை அறியுமோ!!!

பத்ரகிரியார்
* ஆங்காரம் உள்ளடக்கி
ஐம்புலன்னை சுட்டெரித்து
தூங்காமல் தூங்கி
சுகம்பெருவது எக்காலம்!!!

சித்தர் பாடல்கள் தொகுப்பு!!!


I am intrigued by these siddhar songs, which gives a different meaning at all point. I have started searching for them, recently. These ones are written by azhagani sithar. I really can't comment about these songs, coz I'm nowhere near the zone to really understand it. But I'm so honoured to even have a chance to read them...

* சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வெப்பிறப்பு வந்த போது வேதம் வந்ததவுமே
மாத்திரை எப்போது உள் அறிந்து கொள்ள வல்லரேல்
சாத்திரங்கள் ஏதுமில்ல சத்தி மூர்த்தி சித்தியே!!!

* வாழை பழம் தின்றால்
வாய் நோகுமென்று சொல்லி
தாழை பழம் தின்று சாவெனுக்கு வந்ததடி
தாழை பழத்தை விட்டு
சாகாமல் சாக வல்ல
வாழை பழம் தின்றால்
கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ!!!

* ஈசன் உடம்படியோ
ஏழிரண்டு வாசலடி
உண்பாய் என்ன சொல்லி
உழக்குழக்கு நெய் வார்த்து
முத்து போல் அன்னமிட்டு
முக்கனியும் சக்கரையும்
தித்திக்கும் தேனமிர்தம்
கண்ணம்மா
தின்று களைபாறேனோ!!!

* முத்து முகப்படியோ
முச்சந்தி வீதியிலே
பாதம் இதழ் பரப்பி
பஞ்சணையின் மேலிருத்தி
அதை அடுக்கி நிலையில்
ஆருமில்ல வேளையிலே
குத்துவிளக்கேற்றி
கண்ணம்மா
கோலமிட்டு பாரேனோ!!!