நெஞ்சின் வாசம் தூக்கிபோகும்
என் நினைவுகளின் கல்லறைக்கு...
காலம் சுழல சுழல
நான் என்ற உணர்வு
மருகிபோய்...
எது நான் என்ற வினாவுக்கு
விடை தேடுகிறேன்...
தேட கையில் பூதகண்ணாடியும்
வரை படமும்...
நடந்து நடந்து களைத்து போகும்
கால்கள்...
என் வழியில் ஒரு மானுடன்
காதல் பார்வையுடன்...
கால் பிடித்து விட
கண்ணயர்ந்தேன்...
கண் விழித்து அவன் கை விலக்கி
மேலும் நடந்தேன்...
தாகம் மிக
சுற்றி பார்க்க
சூரியனை பிரதிபலிக்கும் நீர் தேக்கம்
தண்ணீர் கையிலெடுக்க
என்னை பார்த்தான்
இவன் காந்தர்வன்....
அவன் கை பற்றி நீரில் மிதந்தேன்
உடலும் மனமும் வழியவழிய...
இதழில் முத்தமிட்டு உயிரை
குடித்தான்....
களைத்து அவன் உறங்க
நான் நடக்கிறேன்...
வழி முழுக்க
முட்கள்...
வழிப்போக்கன்
வந்தவன் கசிந்த ரத்தத்தை
உரிந்துகிறான்...
அவனையும் தள்ளிவிட்டு
நடக்கிறேன்
கண்ணோடு கண் நோக்கி
நீ அழகு என்றான்
ஒரு தேவன்...
புளகாங்கிதம்
அவன் ஸ்பரிசத்தில்
ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகுகள்
ஒன்றாய் வருடியது போல்
இவனையும் விடுத்து நடந்துகொண்டே இருக்கிறேன்...
தேடி தேடி நடக்கும் வழி
இமைக்கும் நேரமெல்லாம்
காதல்...
விழுந்து எழுந்து
திளைத்து உணர்ந்து
காதலன்களின் முகம் நியாபகம் இல்லை
முகங்களின் மேல் முகம் படிந்து....
விகாரமாய்
விஸ்வரூபம் ...
ஆயினும் என் காதல்
சிறு நீரோடையாய் போகும் வழியெல்லாம்
படர்ந்து...
விரவி...
காதலன்கள் ஓலம் காதில் அயராது...
ஆயினும் என் தேடல் நிற்காமல்...
என்னை வலியுறுத்த காதல்
தேவையில்லை
நானே காதலாகினேன்...
Sunday, October 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கவிதையில் மெருகு கூடுது பிரியா.என்றும் காதல் மனம் தொலையாமல் இருக்க வாழ்த்துக்கள்.
thanks chandra... Metaphorically speaking, everyone will feel this...
Falling in love you remain a child; rising in love
you mature. By and by love becomes not a relationship, it becomes a state of your being.
Not that you are in love - now you are love..... என்ற ஓஷோவின் வரிகளை நினவு கூறும் கவிதை..
அருமை..
Lovely Poetry and pictures, I mean your pictures.
-Premi
aahaaa....
நீங்க ஒரு கவிதைபீடியா :))
Post a Comment