Monday, January 14, 2008

நீ!!!

என்னுள் நீ வந்த பின்...
ஏனோ மனமும், மொழியும் பிழன்று நான்...
கேள்வி குறிகள் என் பசியாற்ற
உதட்டோர சிரிப்பு ஜீவன் குளிப்பாட்ட
கண் திருடும் கணங்கள் நம் உயிர் காக்க...
கனவு திரளில் உன் முகம், என் உறக்கம் விழுங்கி...

என்னுள் புகுந்து, என்னை பெயர்ந்து
இதோ பறக்கிறேன், மிதக்கிறேன், சிலிர்க்கிறேன்
அழுகிறேன், சிரிக்கிறேன்
ஏனோ சிரிக்கும் போதும் கண்ணில் நீர்...
எப்போதும் நீ இருப்போயோ என் அருகில்?
கஷ்டம் தான்...

இலக்குகள் தேடும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில்
கட்டாயம் பிரிவோம் நாளை...
அது உண்மை தான்...
ஆனால் வாழ்வில் ஒரு முறை
நான் உயிர் வாழ்ந்த புண்ணியம் உனக்கு தான்...
நாளைய நாட்கள் இறந்தாலும்
இந்த வினாடியின் உயிர் துடிப்பு
என்னுள் நீயாக...
என்றென்றும்!!!

1 comment:

Marie Mahendran said...

பாலைவனம் கடந்த
என் ஆகாய வெளி...
இரவின் தாபங்களை அனலாக்கின்றன..
என் எல்லாம் உன்னுடன்
உருசேரும் ரகசிய மொழியின்
சாரமற்ற குரலில் தீண்டும்
காமத்தின் கறுப்பு கரங்கள்
குறியின் தாபத்தை உன்னால்
யோனிகளின் வாசலைத்தேடி
சயனித்த புத்தனின் கால்கள்
போன போக்கில்
யசோதரையின் கடைசி கேள்விகளுடன்
ஆனந்தனும் அவன் வழி
நடக்கின்றான்...
புத்தனே ...
உன் காமத்தை கடந்த
ஞானத்தை மட்டும்
காமம் என்று எப்படி சொல்லாமல்
இருப்பது..
யசோதா
உன் கேள்விகளை
இன்னும் கேட்கிறேன்..
உடலை தேடும்
கவிதைகளை நான் தொலைத்துவிட்டு
எப்படி ஒரு
ஆகாயத்தை ஆக்கிக் கொள்வது
நிழலாய் படரும்
காமத்தீ..
எரிக்கின்றது
எரிந்து எரிந்து
எரிகின்றது..
நீ
இல்லாத
வெற்று வெளிகளில்....