Saturday, May 26, 2012

கீச்சுகளின் குசுகுசுப்பு 3 - நானும் என் மகனும்


நேற்றைக்கு சண்டை போட்டுபேசவேமாட்டேன் என்று சொல்லிவிட்டு,இன்றைக்கு கொஞ்சிக்கொள்ளும் நட்புகளை வைத்திருக்கிறான் என் மகன்.


 கொஞ்சம் குரல் உயர்த்தி திட்டினால்,பயந்து அலறி என்னையே ஓடிவந்து கட்டிபிடிக்கும் என் பிள்ளையை என்ன செய்யலாம்! இறுக அணைத்து முத்தமிடுவதை தவிர


பறக்கும் மந்திரகம்பளமும், கழுகு தலையும் சிறகும் வைத்த குதிரையும் உறங்குகிறது, என் மகனின் சிறிய படுக்கையில் சுருண்டு




வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்த என் மகன் பாக்கியவான்




உன்னை வளர்க்கப்படும் பிரயத்தனங்களில் நானும் ஒரு தாயாக வளர்கிறேன்




என் மகன் தூக்கத்தில் வரும் பூதங்களை, நான் விழித்திருந்து விரட்ட, என் கனவுகள் எனக்காக காத்துகிடக்கின்றது...




என் மகன் உறக்கத்தில் சிரிக்கையில் கடவுளிடம் அவன் கனவை எட்டி பார்க்க ஒரு ஜன்னல் கேட்கிறேன்...



7 comments:

kathir said...

வெகு அழகு!

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

அழகான கவிதைத் தொகுப்பு. தாயுமானவன் :-)

Senthamizh Selvan said...

ஒவ்வொன்றும் முத்துக்குவியல்..

பழனி said...

அழகான கவிதை ...மிகவும் ரசித்த விரிகள் ., உன்னை வளர்க்கப்படும் பிரயத்தனங்களில் நானும் ஒரு தாயாக வளர்கிறேன் 

Anonymous said...

Mei silirkka vaithadhu ovvoru variyum. I am a dentist, i have a 10 year old son and my mom was widowed when I was 14. I live in Europe as well. It was surprising to know that we have few things in common and hence felt like sharing‘

Priya / vettipullai said...

THANKS TO EVERYONE WHO HAVE TAKEN THE TIME AND EFFORT TO GO THROUGH THEM..

@ ANONYMOUS DENTIST : Nice to hear from you... You have made your mom proud..

sakthi2712 said...

Miga Ayagu.

Entha ulagathil migavum ayaganathu
Kuyanthaigalin ulagam....
Athai vida ayaganathu
Thayudan kuyanthai...

After read this I missing lot my son.
I am useless dad.