
சிறகுகள் உதிர்ந்து முளைக்கிறது நிதம் நிதம்
வளர வளர தோல் உரிக்கிறேன்!
வெள்ளையாகவும் கறுப்பாகவும் வெள்ளியும் தங்கமுமாக
மிதக்கும் பகல்களில் ஊர்கிறேன் !!!
நடக்கும் இரவுகளில் பறக்கிறேன் !!!
உள்ளுக்குள் எங்கேயோ ஒரு இடம்
உலையாய் தகித்து கொண்டிருப்பதேனோ!!!
கொதித்து கொப்பளிப்பதன் வலி எங்கு தெறிகிறது
தெரியாத தேடல் என்னிடம்!!!
இதயம் வெறும் கடிகாரம் என்றால்
மனது எங்கே நிற்கிறது?
மூளையின் உள்ளேயா!!!
இத்தனை குழப்பத்தின் முனையிலும்
எந்த இடத்தில் உணர்கிறேன் என் காதல்களை
என்று தெரியாது திரிகிறேன்..
சிதையும் உடலுக்குள் எங்கெங்கு என் மனது திரிந்தாலும்
மனதின் மேலே உடையா ஓடு வேய்ந்து
வலம் வரும் வரம் எனக்கு!!!
பசுமை காதல் எப்போதாவது எட்டிப்பார்க்கையில்
நானும் நீட்டுகிறேன் ஓட்டின் உள்ளிருந்து என் மனதை!
நீ பேசும் வார்த்தைகளை உண்டு,
உன் சிரிப்பை குடித்து வளர்க்கிறேன் என்னை...
மெதுவாய் கலங்கும் உன் பிரிவை தூரப்பார்க்கையில்
இதோ சுருக்கிக்கொள்கிறேன் என் மனதை...
இன்னும் ஒரு காதல் எட்டி பார்க்கும் வரை!!!
6 comments:
good try!
ஆமைகள் அருகி வரும் உயிராயிருக்கிறது. சூழலியலில் அதன் பங்களிப்பு நுட்பமானது.
காதலும் அப்படி தான் ஆகிவருகிறது... வாழ்வியல் சூழலும் மனித மனத்தை கொன்றுக்கொண்டே வருகிறது...
வேறொன்றுமில்லை.. கொஞ்சம் யோசித்தே எழுதினாலும் பின்னர் படிக்கையில் மற்றொரு கோணத்தில் தவறாக தெரிகிறது. அதனால் தான் முன்னெச்சரிக்கையாக நல்ல பிள்ளையாய் டெலீட்டிவிட்டேன். :))
nalla iruku vaazthkal.
அருமை..
//இதயம் வெறும் கடிகாரம் என்றால்
மனது எங்கே நிற்கிறது?
மூளையின் உள்ளேயா!!//
நல்ல நயமான கேள்வி..
சிந்திக்கவும் வைக்கிறது..
வாழ்த்துக்கள்
Post a Comment