Saturday, January 30, 2010
மந்தகாச உடுப்புகள்!!!
இரவுகளில் ஒரு கந்தர்வன் வருகிறான்..
கறுப்பு குதிரையில் சாட்டை சுழட்டியபடி!
தூங்கியும் தூங்காத வேளைகளில் வரும்
அவன் வாசம் பிடிக்கிறது...
ரத்தமும் தோல்வியும் திமிரும் வெறியும்
கலந்த ஒரு இருட்டு வாசம்...
அவன் பேச்சு மிக மெதுவாய் கேட்டாலும்
காதுக்குள் அது பிரளயமாய்...
நான் எச்சில் ஒழுக தூங்கும் நிமிடங்களை
என் சுவற்றின் விட்டத்தில் இருந்து பார்க்கிறான்...
அவனின் விசும்பல் மிக நுட்பமாய்...
என்னை உறக்கத்தில் புரட்டி போடும்!
விழித்துப் பார்க்கிறேன்
மூக்குகள் உரச, அவன் அந்தரத்தில் மிதக்கிறான்..
கண்முன் விரிந்த கனத்த கடலாய்
கனவுகள் அற்ற கனவில் எனக்காய் உயிர்த்தெழுகிறான்...
கைப்பற்றி அழைத்துப் போகும் உன் தேசத்தில்
சிரிப்புகளும் சோகங்களும் வறண்டுவிட்டது என்கிறான்!
என் கறுப்பு கந்தர்வனே!
இத்தனை நெருக்கத்தில் சுவாசம்
தெறிக்க நிற்கும் உன்னை கைநீட்டி அணைக்கத் தேட...
கணக்கெடுக்க முடியா எத்தனை தொலைவில் அவன்!
கறுத்த அவனில் இருந்து முளைக்கும் ஆயிரம் கரங்களும்
என் பாதையாய் என் வானமாய் விரியும்!
உன்மத்த நிதர்சனத்தை
என் படுக்கையில் கரைத்துக்கொண்டு இருக்கும் எனக்கு
இன்னமும் தெரியாது அவன் யார் எனக்கென்று..
சிரிப்புகளின் ஊடே குரல் குழைந்து
சொல்கிறான்..
இருக்கும் தோலான உன் உடலை கழட்டிவிட்டு வா...
மிதக்கும் உன் ஒன்றுமில்லாதவைகளுக்கு
கொடுக்கிறேன் மந்தகாசத்தை...
உடுத்திக்கொண்டு பார் புரியும்
நான் உன் தோழி...
நீ என் தோழன்...
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்லாத்தான் பீதியை கிளப்புரீக. கவிதை நல்லா இருக்கு. அர்த்தம் பயமா இருக்கு.
ஆயிரம் கரங்கொண்டு அழைக்கும் அகம் அழகான கற்பனை. ஒரு அமைதியான பேரலையாக கனவுகளில் வழிந்து செல்லும் நிஜ உணர்வுகள் .
illai mantamakurinko
Kanavukul kanavana en kanmani..
இருட்டுக்கு வாசம் இருக்குமென்று கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் இங்கே ஒரு விளக்கம் மிக அழகான கவிதையாய்!
வாழ்த்துக்கள் தோழியே! தொடர்ந்து தீட்டுங்கள் உங்களது காவியத்தை..
கருப்பு கந்தர்வனா? ம்...நல்லாருக்குங்க உங்க கற்பனையும் கவிதையும் :)
பிரியா
அந்த கந்தர்வன்
உண்மையாக நான் இல்லை.
Comment எழுதின எல்லாருக்கும் நன்றி....
@ anonymous: யார் நீங்கன்னு சொல்லாமையே நீங்க இல்லைன்னு சொல்லிட்டேங்க... சந்தோசம்
kanuvgal karpangal illatha vazhvu varanta palaivanathil thanneeruku allaythal poola
udal virumba unnarvu viruppum arputha kantharvan nijamai varuvan vazhvin iruthiil unaku petetha muga thoraththudan anandham maddumay appothum ini yappothum balu
ச்சே, ரொம்ப நல்ல ஃபீல்ங்க கவிதை வாசிச்சுட்டு. நல்ல எழுத்து.
Post a Comment