Monday, January 4, 2010

மறைவேன்...



கண் கொண்டு பார்க்கிறேன் உன்னை...
வா... வந்துவிடேன்...
எப்போது தான் வருவாயோ...
கேள்வி மேல் கேள்வி தாங்கி நீ...
என்னோடு கலந்து ஒன்றிவிடேன்...
அழுத்தமாய் அழைக்கிறாய்..
உயர்ந்த மலை உச்சி...
மெல்ல நடக்கிறேன்’
ஒவ்வொரு தடையையும் தாண்டி...
கன்னம் தடவும் குளிர்
எட்டும் தூரம் வரை நீ அகன்று பரந்து...
அழகாய் குதிக்கிறேன்
ஆசையாய் உன்னை நோக்கி!
மிதக்கிறேன் வெறுமையாய்...
அலையில் நுழைந்து வருகிறேன்
கரை நோக்கி திரும்ப திரும்ப...
என்னை தூக்கி சுமக்கிறாய்
இப்புறமும் அப்புறமும்
இடமும் வலமும்
மேலும் கீழும்
குறுக்கும் நெடுக்கும்
அடித்துக் களிக்கிறேன்...
குப்பையாய் மிதக்கிறேன்...
நீந்திக் களைகிறேன்...
மூழ்கி மறைகிறேன்...
நிராகரிக்கிறாயே என் ஆழ்கடலாய் இருந்தும்...
உன்னை ருசிக்கிறேன்.
உணர்கிறேன் மிக சன்னமாய்!
எங்கும் விரவி அடர் உப்பாய் நீ
நானும் உருக்கொண்டேன் உப்பு தூணாய்...
தளும்பி தளும்பி ஒய்கிறேன்
உப்பாய் மாறிய உதடுகளில் காரமாய்
உனக்கான புன்னகை...
கடல் கொண்டது
கரைத்தது...கரைகிறேன்
ஒரு துளியாய் துவங்கி ஆழ்கடலான
உன்னில் அடங்கி...
இதோ
பெருவெள்ளமான உன்னை
சிறுதுளியான என்னுள் அடக்குகிறேன்...
இப்போது தான் புரிகிறது
நான் அறிந்த ரகசியம்...

5 comments:

தமிழ்ச்செல்வி said...

azhagaiiii..arpudhamaiiiiiiiii.

ISR Selvakumar said...

பெண்கள் கவிதை எழுதினால்,
அவர்கள் இன்னும் அழகாகிறார்கள்,
இன்னும் அறிவாளியாக தோன்றுகிறார்கள்.

ப்ரியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

ப்ரியா, புறப்படும்போது நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்.

Vettipullai said...

sure aelva sir

சத்ரியன் said...

//எங்கும் விரவி அடர் உப்பாய் நீ
நானும் உருக்கொண்டேன் உப்பு தூணாய்...//

வெட்டிப்புள்ளை,

கெட்டிப்புள்ளை.

alex said...

அருமையான எழுத்துக்கள் , முடிந்தால் பெரியாரை பத்தி ஒரு கவிதை எழுதுங்கள் .