Sunday, December 13, 2009
முத்தப்பட்டறை!!!
முன்பு காத்திருந்தேன்...
அண்டவெளியை போல் பரந்து விரிந்த முகப்புகள் முன்பு
மின்மினிப்பூச்சிகள் பறக்கும் நேரத்தில்
விழித்திருந்தேன்...
என் கன்னக்கதுப்புகள் காய்ந்த போது
முகப்பில் செம்பு தூண்கள் மின்னியது....
சொர்க்கத்தின் வாயிலோ அது...
தெரியாது அமர்ந்திருந்தேன்!
என் அமைதியை வேண்டி நிற்கும் நொடி
உன் உளைக்கலம் என் கண் முன்...
என் முத்த அச்சுக்கள் சுமந்த உலோகம்
சம்மட்டியில் அடிவாங்க
கொதிக்கும் சிகப்பு நெருப்பாய் உன் மூச்சுக்காற்று...
அச்சாகும் முத்தங்கள் அதில் மெதுமெதுவாய் காய்ந்து...
தேவதைகளின் தோட்டத்தில்
வளரும் சிணுங்கல் விட்டத்தை நோக்கி...
தேடி தேடி காண இயலா
எத்தனை இடங்களில் உனக்கான
முத்தங்களை ஒளித்து வைக்கிறேன்...
ஒளித்து வைக்கும் முத்தச்சருமம்
கனன்று காட்டிக் கொடுக்க
அதரம் சுண்டி விடும்...
உன் ஆசை
பதித்த என் முத்தங்களின் ஈரத்தில்
நீ மிதக்க ஆசை...
இதழ் மேல் இதழ் பதித்து
என் வார்த்தைகளின் ஆதாரங்களை
மிச்சமின்றி உறிவாய்!
என்னுள் ஒளித்ததில்
எந்த வார்த்தைகள் உனக்கானது...
எந்த முத்தங்கள் உனக்கானது...
எந்த தொடல்கள் உனக்கானது....
எந்த முனகல்கள் உனக்கானது...
தேடி எடுக்க ப்ரயத்தனப்படும் தேவன் நீ!
உதட்டோரம் ஒளித்து வைத்த முத்தம் தேங்கி
உன் கண்ணை அழைக்க...
கண்ணோரம் ஒளித்து வைத்த முத்தம் சேர்ந்து
உன் உதட்டை அழைக்க...
கண்கூசும் ஒளியாய் இருந்தும் நிறைந்தும் விட்டு
இருட்டை முழுமையாய் போர்த்திவிடுகிறாயே!
மொத்த முத்த கலவையை கேட்டுவாங்கி
என் ப்ரபஞ்சத்தை கவர்ந்திழுத்து
நடுநாயகமாய் அமர்ந்துவிடுகிறாய்...
ஆனந்தம் சேர்க்கிறாய்! அழுகை பரிசளிக்கிறாய்!
வெளி செல்லும் காற்றை என் உதட்டில் இருந்து
மொத்தமாய் கவ்வி எடுக்கிறாய்....
வந்து சேரும் நீ என் சூட்சமம் ஆகி
என் தீவிர செயலாய்
என் ஒளிகற்றையாய்
என் தாப ஏக்கமாய்
கொடுக்கிறாய் உன் சாயல்
தாங்கினேன்!
தாங்குகிறேன்!
தாங்குவேன்!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
படமும் கவிதையும் ஒரே வீச்சில் இருக்கிறது.
பிரமாதம்!
enjoy priya
ஆடை மூடும் மேடு பள்ளம் (பெண்) ஆளை அசத்தினாலும், அதற்குள் கொலுவிருக்கும் கருவறைப் போல்,
//உன் சாயல்
தாங்கினேன்!
தாங்குகிறேன்!
தாங்குவேன்!//
இந்த வரிகளில் தான் கவிதை கொலுவிருக்கிறது.
sarekamapathanisa kavithai sangeetham kathala kamama puriyatha puthir kannavum nanavum santhikkum kavithikal bala
Post a Comment