Thursday, November 19, 2009

என் பட்டாம்பூச்சிக்கு ஒரு குட்டி கதை...

என் தங்க சிட்டு,
அம்மா சொல்ற ஒரு ஆசை கதை...
தூங்கணும் அதுக்கு அப்புறம்...
தொல்லை பண்ணாம...
ரொம்ப நாளைக்கு முன்னாடி
ஒரு அழகான தேசம்...
சிரிப்பு மட்டும் தான் அங்கே மொழி...
அந்த அழகான ஊர்ல
ஒரு சந்தோஷமான குடும்பம்...
அந்த வீட்டில ஒரு பொண்ணு
நம்ம கதாநாயகி...
கருவாச்சி தான்...
எப்பவும் சிரிப்பா...
திடீர்னு அந்த ஊர்ல ஒரு புயல் அடிக்க
அந்த வீடு ஒடஞ்சி போச்சாம்...
புயல் அடிச்சதும் ஆளுக்கொரு பக்கம்
பிரிஞ்சு போய்ட்டாங்களாம்...
பாவம்!
அந்த பொண்ணு வேற ஒரு நாட்டுல போய் விழ...
அங்கேயே இருக்கா... சோகமா....
ஒரு அழகான வீரன் வந்து
கல்யாணம் பண்ணிக்க
கொஞ்சம் சந்தோஷமா இருக்கா....
இதுல ஒரு குட்டி ராஜகுமாரன் பிறந்துட்டான்
அந்த புள்ளைக்கு...
பட்டு குட்டி...
அழகன்....
ஆசையாய் எப்பவும் இருக்க
திரும்ப ஒரு பூகம்பம்...
அவ ஒரு பக்கம் போக
அவளோட செல்லகுட்டி இன்னொரு திசையில்...
இப்போ தான் தொடங்குது
அவளோட பிரயாணம்
அவளோட குழந்தையை தேடி...
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
ஏற முடியாத ஒரு மலையில
ஒரு சாவி...
அந்த சாவி தேடி போயிட்டே இருக்கா அவ.
இனிமே தான் சாவி தேடி
சாவி சேர போற பூட்டு தேடி
பூட்ட தொறந்து
அதில இருக்க வரைபடம் எடுக்கணும்...
கண்டுபிடிக்கற திசைகாட்டியும்....
சாவி தேடுற வழியெல்லாம்
நெறைய ஆபத்து...
ஆனாலும்
கெட்ட மிருகத்தை எல்லாம் கொன்னுபோட்டுட்டு
பசியோட இருக்கா செடிக்கெல்லாம் தண்ணி ஊத்திட்டு
வர ராட்சசர் எல்லாம் வதம் பண்ணிட்டு
போய்கிட்டே இருக்கா..
அந்த வரைபடம் அவளை கூட்டி போகும்
அவளோட அந்த பிஞ்சு இதயத்துகிட்டே...
அந்த இதயத்தை திரும்ப எடுத்து
தனக்குள்ளே வச்ச தான்
அவளுக்கு உயிரே வரும்...
அது வரை நடந்திட்டே இருப்பாளாம்...
செல்லம்...
கண்ணா...
தூங்கிட்டியா பட்டு...
நாளைக்கு திரும்ப கூப்பிடுறேன்
இன்னொரு கதையோட...
இப்போதைக்கு என் தொலைபேசி
மட்டுமே கடக்கும்
ஏழு கடல் ஏழு மலை...
சீக்கிரம் நானும்...
அதுவரை
உன் எச்சில் முத்தத்துக்காக
ஏங்கிட்டு இருக்கும்
சிரிப்பு தொலைந்த
கருவாச்சி
உன் அம்மா...

5 comments:

Marie Mahendran said...

செல்லம்...
கண்ணா...
தூங்கிட்டியா பட்டு...
நாளைக்கு திரும்ப கூப்பிடுறேன்
இன்னொரு கதையோட...
இப்போதைக்கு என் தொலைபேசி
மட்டுமே கடக்கும்
ஏழு கடல் ஏழு மலை...
சீக்கிரம் நானும்...
அதுவரை
உன் எச்சில் முத்தத்துக்காக
ஏங்கிட்டு இருக்கும்
சிரிப்பு தொலைந்த
கருவாச்சி
உன் அம்மா...

அடி ஆத்தா
உன் கதையை நானும்தான்
நம்பிட்டேன்...
சிறுபிள்ளையை தூங்க வைத்த
உன் கதையின் தாலாட்டில்
என் இரவுகள் விழிக்கின்றன..
பட்டு குட்டியாக
நீயும் சுமக்கும் கால கதையை
நானும் தேடுகின்றேன்..
உன் செல்லம் உறங்கி விட்டான்
தொலைபேசிக்கும்
இணைய வழி தொடர்ப்புக்கும்
என்ன கதை இப்போ
சொல்ல போகிறாய்...?

யாருமற்ற தீவாக நான் இருந்தேன்
தாகத்துடன்
வந்து என் தனிமையை
உன் தாலாட்டும்
போக்கியது..
நேற்றுகூட நீ வரவில்லை
என்ற போது
பாழாபோன பழைய மனசு
பட்டு தறியாகி கெடக்கு..

ஆளுமில்லை அரவுமிலலை
நீ உறங்கும் வேலையில
நான் இங்கு உறங்கவில்ல..
எட்டு கடல தாண்டியிருக்கம்
உன் முகத்தை
எப்பதான் பார்ப்பேனோ..ஃ
எந்த திசைக்கும் நான் பாய்மரமா
அலை கடலில்
அடிச்சி போவேனோ...?

Thenammai Lakshmanan said...

//உன் எச்சில் முத்தத்துக்காக
ஏங்கிட்டு இருக்கும்
சிரிப்பு தொலைந்த
கருவாச்சி
உன் அம்மா...//

kathai kettu muduchu ithap padichu muduchavudane sogamairuchu PRIYA

Thenammai Lakshmanan said...

//உன் எச்சில் முத்தத்துக்காக
ஏங்கிட்டு இருக்கும்
சிரிப்பு தொலைந்த
கருவாச்சி
உன் அம்மா...//

kathai kettu muduchu ithap padichu muduchavudane sogamairuchu PRIYA

ISR Selvakumar said...

ப்ரியா . . .
உனக்குள் புதிதாக திடீரென்று ஒரு கவிமகள் விசுரூபமெடுக்கிறாள்.

பல நெஞ்சங்களை உனது கவிதை தொடுவதற்கு . . .
வாழ்த்துகள்!!!

சத்ரியன் said...

//நெறைய ஆபத்து...
ஆனாலும்
கெட்ட மிருகத்தை எல்லாம் கொன்னுபோட்டுட்டு
பசியோட இருக்கா செடிக்கெல்லாம் தண்ணி ஊத்திட்டு.....//

ப்ரியா,

என் மனதை ஒரு முறை கணிணித் திரையில் படித்து பார்க்கும் பாக்கியம், ஆனால் அது ப்ரியாவின் விரல் முனையிலிருந்து வழிந்திருப்பது தான் எனக்கு வியப்பு.

மீண்டும் மீண்டும் படிக்கிறேன் இந்தக் கவிதையை.! பெண் பால் சொற்களுக்கு பதிலாக ஆண் பால் சொற்களை நிரப்பி.....!

நன்றியும், வாழ்த்துகளும்...!