Monday, October 12, 2009

கள்ளன்!!!

மெல்லிய குளிர்
கண்கள் இருட்டை உள்வாங்க
உன் பேச்சு காதோரம் மெதுவாய்
என் வெளிச்ச வேதனை நீ
கரைகிறேன் ...
கரைகிறேன்...
இதழ் ஈரம் காதுமடலை சுட்டெரிக்க
எப்படி சாத்தியம் உன்னால்
ஒரே நேரம் உயிர் கொடுத்து உயிர் எடுக்க...
ஆழிபெருக்கில் அடித்து செல்லும் சிறு துரும்பாய்
நான்
உன்னால் அழுகிறேன் சிரிக்கிறேன்
ஒரே நிமிடகரைசலில்
நான் நீயாக
நீ நானாக
கரைகிறேன்...
கரைகிறேன்...
உன் வார்த்தைகள் எனை எழுப்ப
என் பாட்டோ உனை தாலாட்டும்
இத்தனை நாள் சுமந்த சோகம்
நொடி நேரம் இடம் மாறி
சுமைதாங்கியும் என்னோடு
கை கோர்த்து நடக்க
கரைகிறேன்...
கரைகிறேன்...
இறந்த பின்னும் உயிர் பெற்று எழ
நீ
மட்டும் தான் காரணம்

4 comments:

butterfly Surya said...

கவிதை அருமை. புகைப்படம் எங்கே கிடைத்தது..??

PaulGregory.... said...
This comment has been removed by the author.
PaulGregory.... said...

வாழ்துகள் கள்ளன்,

இந்த கவிதை உங்கள் மனதின் இனிமையான ஓசை...

நிலாரசிகன் said...

வாழ்த்துகள் கவிதை நன்று.