Sunday, August 24, 2008
எதற்காக?
தாயின் வயிற்றில் கருவுற்ற
நாள் முதல் ஓட்டம்!
நேரத்துடன் போட்டி...
கடுகளவில் தொடங்கி
கையும் காலும் முளைத்து வளர்ச்சி...
பத்து மாதம் போக
வெளிஉலகம் தொட்ட நேரம் தொடங்கி...
வயிற்று பசி...
வளர பசி...
உயிர்வாழ பசி...
புத்தி தெளிய தெளிய
எல்லாம் கற்க வெறி!
அன்னையும் தந்தையும் அரவணைக்க
எல்லார் முன்னிலும் விருட்சமாய் வளர
கல்வி பசி...
கண் விழித்து... போட்டி இட்டு...
தேர்வுகளின் பிடிகளில் சிக்கி
ஒரு போராட்டம்...
படிப்பும் முடித்து
வேலைக்கான அலைச்சல்...
மீண்டும் ஓட்டம்...
வேலையும் கிடைக்க
வாழ்வில் மீண்டும் பசி
இன்னொரு துணை தேடி...
புணர பசி...
இன்னொரு ஜீவனை படைக்க பசி...
நாட்கள் ஓட ஓட
உடலும் சோர்ந்து கடமைகள் அழுத்த
இன்னும் வேண்டும் வேண்டும்
என்று பட்டியல் நீள
திரும்பி வந்த பாதை நோக்க
நாட்கள் உருண்டு கரைந்து!!!
எல்லாம் கிடைக்க
இன்னும் ஓட்டம்
இத்தனை நாள் சுமந்தது எல்லாம்
சட்டென்று ஓர் நாள் மறைந்து போக
நிதர்சனம் நான் தான் என்று விளக்கும்
இறப்பு!!!
எதை நோக்கி இந்த ஓட்டங்கள்,
இந்த கண்ணீர், இந்த ஆனந்தம்
என்ன தான் பொருள்?
எதற்கு வந்தோம்...
என்ன சாதித்தோம்...
எங்கு போகிறோம்...
விடை தெரியாத கேள்விகள்
செத்த பின் சொர்க்கமா நரகமா...
எந்த கடவுளை பின்பற்றினால்
சொர்க்கம் நிச்சயம் என்ற போட்டிகளின் மத்தியில்...
ஒன்று மட்டும் நிஜம்
பிறப்பை கணிக்க தெரியாது போனாலும்
எல்லோரும் இறப்பது மட்டும் நிஜம்
என்ற உண்மை மெல்ல தெளியும்...
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இறுதியாக எஞ்சி இருக்கப்போகும் உண்மை தெரிந்தால் உலகம் கசத்துப் போய்விடும்.நல்ல கவிதை தொடருங்கள்.
Wonderful!!!
that is not true...
When we know what we are to become at the end, all that we fight for and fight about will be meaningless. Which will bring peace in the world.
வாவ். அருமை.
என் குரு ஓஷோவை படிப்பீர்களா..??
சொல்லிவிடும் வரிகளில்
ஒளித்து வைக்கம் உன் காதல் கொண்ட
தனி மனதை வரிப்பதும்
பின்பு ஒப்பனைகளை பரப்பி
சமாளிக்கம் காரணங்களை
சும்மாவாது சொல்வதும்...
கண்ணாமமூச்சி ஆட்டத்தின்
என் கடைசி பாத்திரம்
மட்டும் சுயம் நசுங்கும் துயர்
கண்டு சொற்களின் போதைமை
உன் ஆழ்ந்த அந்தப்புரத்தை
அரசாளத்துடிக்கும்
என் பாழ்ய இரவுகளுக்கு
நீ போடும் கலாசார
தடையை நான் உன் உடலின்
அசையும் புணர்ச்சியுடன்
கடப்பேன்...
கண்களில் நீ பேசுவதை
என் பழைய உடல்
சற்டென்று சிறகுகள் பூட்டிய
தேவதையாக வெளியெங்கும்
உன் குறும்புப் புன்னகையுடன்
கேமராவில் சிரிக்கும்
உன் தனிமையை
தாயின் பரிவுடன்
அணைத்து துமக்க
அவா கொள்கிறது
என் பாழும் மனது...
.........
......
புரிந்துக் கொண்டும்
புரியாத அறைகளில்
வசிக்கம் நம் உறவை
விளக்கி வைக்கம்
காரங்களை
சபிக்கிறேன்...
புத்தனின் குறியை
தியாகிக்கிறேன்...
ஆயினும்..
உடல்.....
புத்தகமாகவே வெளியிடலாம்!!!
முழுதும் வாசித்தேன்.
இன்னும் வசித்துக் கொண்டிருக்கிறேன். திளைத்த பின்...தொலைந்து போனாலும் போவேன்.
Post a Comment