Saturday, March 22, 2008

கண்ணீர்!!!


ஏனோ?
எதனாலோ?
என் இத்தனை கரிப்போடு?
நெஞ்சு பிழிந்து இதயம் கசியும்
உதிரம் ஆயிற்றோ கண்ணீர்!
இல்லை
பனி போன்ற சிரிப்பை சோதனை சூரியன்
தொட்ட நொடி உருகி ஆனதோ கண்ணீராய்!
இல்லை
வாழ்க்கை வானம் இருண்டு பயமின்னல் தாக்கி
நெஞ்சு மேகங்கள் உதறிய வேதனை துளிகள் தான்
கண்ணீரோ?
இல்லையே
அது மட்டும் இல்லையே!
நெஞ்சு நிறைந்து, சொர்க்கம் தொட்ட பூரிப்புடன்
மனம் முழுக்க சிரிப்புடன் முகம் காணும் நேரம்
கண்ணில் நீர்!
எதிர்பாரா சோகத்தில் எதிர்பாரா நேரம்
தோள் தர ஒரு உயிர் இருந்தால், அப்போதும்
நன்றியோடு கண்ணில் கோர்க்கும் நீர்!
பெற்ற பிள்ளையை கையில் எடுத்த நேரம் தொட்டு
இதய துடிப்பாய் மாறிய அந்த சிறிய முகம்
நினைக்கும் போதெல்லாம்
சேரும் விழியின் ஓரத்தில் நீர்!
என் தாயின் மடியில் நான் கிடக்க
என் தலை வருடி
மௌனமாய் என்னை பார்க்கும் அந்த பார்வை
சொல்லும்
ஆயிரம் கதைகள் சந்தோஷமாக...
ஆயிரம் நினைவுகள் துக்கமாக...
தளர்ந்த அந்த தாயை பற்றி நினைக்க
என் விழியை நனைக்கும்
என்னை அறியாமல் கண்ணீர்...
ஆயிரம் மொழிகளில்,
ஆயிரமாயிரம் விதங்களில்,
வர்ணித்து விவரித்து மாய்ந்தும்
இன்னும் ஒரு கோடி வார்த்தைகள்
மிச்சம்
அந்த ஒரு துளி நீர் பற்றி
விவரிக்க...

2 comments:

OLD FOXX said...

Hi,

ur stuff is realy good and u hav lot of imaginaions about this life.
but one thing, i dont understand is, why r u sad always? life is not happy for all. we hav different types of problems here.everybody is facing problems from dawn to dusk. but it is on our part how to take the problems in a sportive way. i tooooooo hav many problems, but i hav taken all in a very sportive way and i am fully confident to overcome all problems with ease. be optimistic always, dont be pesimistic. i will be with u for all types of support for ur future success.
Ramesh, chennai

Vettipullai said...

ramesh thambi,

thanks...