Friday, February 29, 2008

விடை!!!

மனது கனத்து வலித்தது!
திரும்ப சந்திக்கும் விதி வருமோ!
இல்லை...
எப்போதும் போல நொடியில் மறையும் ஜன்னல் காட்சியாய்
மறைந்து போய் தான் விடுவாயோ!!!
நூலின் சிடுக்காய் மனசு முழுக்க
கேள்விகளும், துணை கேள்விகளும்...
இனி காணவே முடியாது போனால்
தாங்க தைரியமுண்டா என் இதயத்துக்கு?
புதிதா என்ன இந்த இத்து போன என் வாழ்வில்
ரயில் சினேகிதங்கள்!!!
வாழ்க்கை முழுக்க வந்து வந்து
மறையும் மின்மினியாய் முகங்கள்!!!
சிலருக்கு தான் எத்தனை பாக்கியம்!
ஒரே இடத்தில் பிறந்து, அதே இடத்தில் வாழ்ந்தும், முதிர்ந்தும்
அதே இடத்தில் ஜீவன் உதிர்ந்தும் போய்...
ஏனோ எனக்கு ஒரு நாடோடியின் வாழ்வு!
சிறிய மூட்டையாய் முதுகில் நியாபகங்கள் சுமந்து...
செல்லும் வழியெல்லாம் கால் தடம்கூட விடாத காற்றாய்
நான்...
வறண்ட என் பயண பாதையில்
நான் இளைப்பாற எனக்கு கிட்டிய ஒரு அகன்ற மரம் நீ!
மனதும் உடலும் ஓய்ந்து நின்ற நேரம்
மீண்டும் உயிர்பித்தது உன்னால்தான்!
நான் நீராய் போனால், உன் வேறை சேரலாம்
இல்லை
மண்ணாகி போனால், உன்னோடு இறுகி போகலாம்
ஏனோ
அலையும் காற்றாய் போனேனே!!!
எஞ்சியது நினைவில் அந்த சில நிமிட தழுவல் மட்டும்
திசை மாறும் இடமெல்லாம் நான் போக
மீண்டும் உன்னை காண நேர்ந்தால் சந்தோஷம் தான்
ஆனால்
என் தொடல் சில நிமிடம் தான்!
மீண்டும் விடை கொடுப்பேன் உனக்கு
என் முத்தத்தின் ஈரத்தோடு,
கண்ணீரின் சுவை கலந்து!

1 comment:

செல்வா said...

//நான் நீராய் போனால், உன் வேறை சேரலாம்
இல்லை
மண்ணாகி போனால், உன்னோடு இறுகி போகலாம்
ஏனோ
அலையும் காற்றாய் போனேனே!!!//

ரொம்ப அருமைங்க ! உண்மைலேயே ரொம்ப பீல் பண்ணி எழுதினமாதிரி இருக்கு!