Friday, January 18, 2008

வேசி...

உதட்டில் சாயம்...
கண்ணில் மை...
வாயில் வெற்றிலை...
அலட்சிய பார்வை...
மதமதத்த தேகம்...
இடுப்பில் மடிப்பு...
உதட்டோரம் ஒரு சுழித்த சிரிப்பு...
மார்பு சேலை சரி செய்ய கூட தோன்றாத பெண்மை...
பார்ப்போர் திரும்பி பார்க்க வைக்கும் தோற்றம்...
பெண்களிடம் பொதுவாய் உள்ள எல்லை கோடுகள்
காணாமல் எங்கோ போய்விட்ட நிலை...
கிறக்கமாய் அருகில் ஆண்களிடம் கூட காட்டமாய் ஒரு பேரம்...
விலை படியுமோ படியதோ என்ற கேள்வி குறி
பெண்கள் ஒதுங்கி நின்று கண்ணால் அவளை சுட்டெரிக்க...
யாருக்கு தெரியும் அவள் கதை
என்னவென்று
நோயான தாய் தந்தையோ இல்லை
குடிகார கணவனோ இல்லை
பசியோடு பிள்ளைகளோ...
பண்டமாற்று முறையில் கை மாறும்
இவள் பெண்மை
மறுத்தும் மறித்தும் தான் போய் இருக்குமோ?
ஆனால்
கண்ணோரம் தொக்கி தான் நின்றது
ஒரு சோகம்
இன்னொரு இருட்டை தேடி...