Wednesday, December 5, 2007

Let me say bye now

போய் வருகிறேன் தோழா!
விலகல் இல்லை இது;
விடைபெறல் மட்டுமே!
உனக்கான நேசமும் காதலும்
என்னுள்நிலைத்திருக்கும் என்றென்றும்.......

நாமிருவரும் நட்பாய் கை குலுக்கினோம்;
நதியின் பிரவாகமிருந்தது நமக்குள்......
காதலாய் நிறம் மாறியபோதும்
கனவுகள் பொங்கிற்று மனதில்!

திருமணம் என்ற உறவுக்குள் புகுந்த
மறு நிமிடமே
நீ புருஷனாய் மாறிய
இரசாயனம்புரியவேயில்லை எனக்கு!

அதிகார அஸ்திரங்களைத்
தொடுக்கத் தொடங்கினாய் அடுக்கடுக்காய்;
வாலியை மறைந்திருந்து வதம்
செய்த இராமபானங்களையும் விடவலிமையானவை அவை....
இரணமான நாட்களின் நினைவில்
இன்னும் கூடஇரத்தம் கசிகிறது நெஞ்சில்!

எவ்வளவு முயன்றும் -
உன்புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதன மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய் மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா!

வேறு வழி தெரியவில்லை;
அதனால்விடை பெறுகிறேன்
உன்னிடமிருந்து கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய்
நாமிருந்த கசப்புகளை மறந்து..........!

6 comments:

Encrypted Heart said...

naaan un mela kovama irukkaen, juz friendnnu pottuttala? en name mention pannalai, juz kiddin, but this is not my kavidai, i was suttifying frm somewhere else :)

Vettipullai said...

Jagan,

sutta kavidhaikke ithanai kovama da, Innum neeye ezhudhi irrundha enna solluviyo

lol,,,

keep sending good ones,

Anonymous said...

சுட்டது தானா? சொந்த கதை இல்லையா??????

S.BALARAMESH said...

உன்னிடமிருந்து கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
ARPUTHAMAN VARIGAL..

NAAN 6 VARUDANGALUKKU MUN ELUTHIYA VARIGALIN GNABAHAM

KALAK KADALI KAL NOOTRANDUKKUN PIN UNAI NAAN KANDEDUTHIRUKKIREN...

சு. திருநாவுக்கரசு said...

படித்தேன். கவிதையில்
காயம் தெரிகிறது. அதிலுள்ள
நியாயம் புரிகிறது.

anandrajah said...

காயமோ, நியாயமோ ஆனால் கனகச்சிதமாக வார்த்தைகளை பிரயோகப்படுத்தியுள்ளீர்கள். என் முன்னாள் காதலி, சில சமயங்களில் நான் "கணவன்" என்னும் இரசாயன மாற்றம் பெற்றாலும், இன்றும் என் காதலியாகவே தொடர்கிறார்.