Sunday, March 31, 2013

நானும், என் நேற்றும்!!!


வேர்களால் புதைந்து போன என் வீட்டின் உள்ளே
மிதக்கும் கருப்பு நதியொன்றில்
வந்து விழுந்தது நேற்று
சின்னஞ்சிறு தீப்பொறி எங்கிருந்தோ!

சிகப்பும் தங்கமுமான நட்சத்திரம் ஒன்று
உடைத்து வந்தது பொறிக்குள்ளிருந்து!!!
மெல்லிய வெள்ளி சிறகுகள் கொண்ட  நட்சத்திரம் தானே
என எனக்கான சிறிய வீட்டுக்குள்ளே
அதற்கும் ஒர் இடம் கொடுத்தாக நினைவு!

அதுவும் வளர்ந்தது நுட்பமாய்
என் இருட்டெல்லாம் மெல்ல விண்டு விழிங்கியபடி!!
பார்க்கும் போது சிரிப்பதாகவும்
பார்க்காத போதும் என்னையே பார்ப்பதாகவும்
சொல்லிக்கொண்டே நடனம் ஆடியது!!!

என் இருட்டு வீட்டுக்குள் இருந்த எறும்பும், புழுவும்
தீர்ந்து போய் பசிப்பதாக சொல்ல
என் படுக்கையும் சுவரும் ருசிக்கிறது என
சொல்லியபடியே உண்டு முடித்தது வின்மீன்!!!

சுற்றி பார்க்கையில் சலசலக்கும் என் கருப்பு நதியை காணவில்லை!
என் வேர் சுவரும், கூரையும், நாற்காலியும் காணவில்லை!
என் உடைகளும், சீப்பும், கண்ணாடியும் காணவில்லை!
என் வேரில் ஒளிந்திருந்த மின்மினிப்பூச்சிகளை காணவில்லை!

இனி உண்ண ஒன்றும் இல்லை என்று உதடு பிதுக்க
என் கையும் காலும் பிய்த்து கொடுக்க
கண்ணை மட்டும் விட்டு எல்லாம் விழுங்கி
அழகாய் வாய் துடைக்கிறது நட்சத்திரம்!

கைக்குள் சிறிதாய் அடங்கியிருந்த நிலை மாறி
என் பூமியும் வானமும் சுவரும் ஆகி போன
நட்சத்திரம் வந்ததில் இருந்து
என் இருட்டு வீடும் என்னையும் காணவில்லை!

இனி உண்ண இங்கொன்றும் மிச்சமில்லை என்று
எஞ்சியிருந்த என் கண் பார்த்து
புருவம் உயர்த்தி சொல்லிவிட்டு
வெடித்து சிதறியதில் ஆயிரம் தீப்பொறியாய் மாறி
வேறு நதிகளில் விழ காற்றில் பறந்து போவதை பார்த்தப்படி
என் கண் புதைகிறது இருட்டுக்குள்!

4 comments:

Actor Crazygopal said...

தலையில் சுமந்திருக்கும் அரவமும்., அது விழுங்கியிருக்கும் வண்ணத்துப்பூச்சியும் நிர்ணயிப்பதில்லை நம் தலையெழுத்தை.

பாரமாய் தாங்கி நிற்க மட்டுமே முடியும்,

பாலமாய் தன்னம்பிக்கை மட்டுமே துணையாய் நிற்கும்


ஓடுவது கண்ணீராய் இருக்கலாம்,

வாடுவது நாமாயிருக்க கூடாது.



நட்சத்திரமாய் நாமும் ஒருநாள் ஜொலிக்கத்தான் போகிறோம்..

Actor Crazygopal said...

தலையில் சுமந்திருக்கும் அரவமும்., அது விழுங்கியிருக்கும் வண்ணத்துப்பூச்சியும் நிர்ணயிப்பதில்லை நம் தலையெழுத்தை.

பாரமாய் தாங்கி நிற்க மட்டுமே முடியும்,

பாலமாய் தன்னம்பிக்கை மட்டுமே துணையாய் நிற்கும்


ஓடுவது கண்ணீராய் இருக்கலாம்,

வாடுவது நாமாயிருக்க கூடாது.



நட்சத்திரமாய் நாமும் ஒருநாள் ஜொலிக்கத்தான் போகிறோம்..

RojaTV said...

நானும் தூங்க எத்தனிக்கிறேன்..துரத்தும் பரி மேல் ஏறி விட்டம் பார்த்தபடி..மேகத்தின் வாசத்திநூடெ..

Actor Crazygopal said...

என்றென்றும் அன்புடன் @Rjcrazygopal