
இருட்டு குளத்தில் அமர்ந்து பார்க்கையில்
வெண்மையாய் தகதகக்கும் பிம்பங்கள்
அனைத்திலும் தொலைந்த முகங்களின் திரட்டு...
முகங்களை தொலைத்தவர்கள்
வசிக்கும் வீதியின் முடிவில் தான் என் வீடும்!
இப்போதும் பிடிக்கிறதா என்ற கேள்வி விதைகள் புதைந்து
சந்தேக வாசனை மலர்கள் பூத்து நிற்கிறது!
முன்பு பிடித்தவனின் முகம் பிய்ந்து
இதே குளத்தில் கரைந்துவிட்டதாக சொல்கிறது
நீர் திவலைகள்!
கொதித்து கொப்பளிக்கும் கோப சகதியும்,
தேடியது கிடைக்காத வன்மமும்,
பேசுவது போய் சேராத நிழற்திரை வானமும்,
இழைந்து செய்த கசப்பு உலகங்களின்
முடி சூடா அதிபதிகள் முங்கிய குளம் அது!
நேற்று பிடித்த அவன் முகம்
குளத்தில் புதைந்து நீரின் மேற்பரப்பில்
வெள்ளி கம்பியில் காற்றாடியாய் மிதக்க
அவனும் சொல்கிறான் குளத்தின் அக்கரையில்
என் முகம் மிதப்பதாக!
5 comments:
சுயம் மிதக்கும் கண்ணாடிக் கவிதை !
நன்று சொற்கோர்வையும் உணர்வாழமும் ..!
நான் கண்ட வரையில் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகள் ஒரு பொருளை சட்டென்று சுடாமல், சுட்டும் சுடாமலும் சொல்லும் காரணம் என்ன?..தங்களின் எழுத்துகளிலும் அதை காணமுடிகிறது.இது போன்ற பரிணாமம் பெற்ற கவிதைகள் என்னை போன்ற பாமரனுக்கு புரிந்தும் புரியாததுமான கேள்விக்குறிகளை விதைக்கிறது. மற்றபடி நன்றாக உள்ளது சகோதரி.
"கொதித்து கொப்பளிக்கும் கோப சகதியும்,
தேடியது கிடைக்காத வன்மமும்,
பேசுவது போய் சேராத நிழற்திரை வானமும்,
இழைந்து செய்த கசப்பு உலகங்களின்
முடி சூடா அதிபதிகள் முங்கிய குளம் அது!"
இந்த வரிகள் அருமை...
// இப்போதும் பிடிக்கிறதா என்ற கேள்வி விதைகள் புதைந்து
சந்தேக வாசனை மலர்கள் பூத்து நிற்கிறது!
முன்பு பிடித்தவனின் முகம் பிய்ந்து
இதே குளத்தில் கரைந்துவிட்டதாக சொல்கிறது
நீர் திவலைகள்!//
manam kanakkacheyyum var/likal !
முகங்களை தொலைத்தவர்கள்
வசிக்கும் வீதியின் முடிவில் தான் என் வீடும்!
adarthi miga varikal
hai priya how is poem
Post a Comment