நேற்றைக்கு சண்டை போட்டுபேசவேமாட்டேன் என்று சொல்லிவிட்டு,இன்றைக்கு கொஞ்சிக்கொள்ளும் நட்புகளை வைத்திருக்கிறான் என் மகன்.
கொஞ்சம் குரல் உயர்த்தி திட்டினால்,பயந்து அலறி என்னையே ஓடிவந்து கட்டிபிடிக்கும் என் பிள்ளையை என்ன செய்யலாம்! இறுக அணைத்து முத்தமிடுவதை தவிர
பறக்கும் மந்திரகம்பளமும், கழுகு தலையும் சிறகும் வைத்த குதிரையும் உறங்குகிறது, என் மகனின் சிறிய படுக்கையில் சுருண்டு
வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்த என் மகன் பாக்கியவான்
உன்னை வளர்க்கப்படும் பிரயத்தனங்களில் நானும் ஒரு தாயாக வளர்கிறேன்
என் மகன் தூக்கத்தில் வரும் பூதங்களை, நான் விழித்திருந்து விரட்ட, என் கனவுகள் எனக்காக காத்துகிடக்கின்றது...
என் மகன் உறக்கத்தில் சிரிக்கையில் கடவுளிடம் அவன் கனவை எட்டி பார்க்க ஒரு ஜன்னல் கேட்கிறேன்...